சங்கடஹர சதுர்த்தியன்று சொல்லவேண்டிய கணபதி துதி

- Advertisement -

சங்கடஹர சதுர்த்தியன்று சொல்லவேண்டிய கணபதி துதி

Sangadahara Sathurthi Songs Lyrics in Tamil

கணபதிக்கும் மிகவும் உகந்த சங்கடஹர சதுர்த்தி தினத்தில் நாம் சொல்ல வேண்டிய முக்கிய ஸ்லோகத்தை இங்கு தெரிந்து கொள்வோம்… விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.

கணபதி துதி 1

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே
எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி
மனதிற் சலனமில்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின் மவுன
நிலை வந் திடநீ செயல் வேண்டும்
கனக்குஞ் செல்வம் நூறு வயது
இவையும் தரநீ கடவாய்…

கணபதி துதி 2

கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கைதொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே

காக்கும் கடவுள் கணேசனை நினை
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருள் துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருளே துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை

- Advertisement -

யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்
யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்
அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்
ஊட்டும் உலகிற்கும் ஒளி தரும் உறிபொருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்

காக்கும் கடவுள் கணேசனை நினை

நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்
நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்
ஓம் என்னும் ஒளி அது உருவமாய் வளர்பவன்
உமையவள் மடியிலே குழந்தையாய் திகழ்பவன்

காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருளே துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts