40 ஆண்டுகளுக்கு பிறகு அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டது

- Advertisement -

40 ஆண்டுகளுக்கு பிறகு அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டது

காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் நீருக்குள் இருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

athi Varadar

அத்திவரதர் விழாவுக்காக அத்திவரதர் சிலையை திருக்குளத்தில் இருந்து வெளியே கொண்டு வருவதற்காக குளத்தில் உள்ள நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. பின்னர் சேறு, சகதிகளை அகற்றும் பணிகள் கடந்த சில நாட்களாக வேகமாக நடந்து வந்தன.

athi_Varadar நேற்று அதிகாலை சுமார் 2.45 மணியளவில் திருக்குளத்தில் இருந்து அத்திவரதர் சிலையை அர்ச்சகர்கள் வெளியே எடுத்து வந்தனர். 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதரை தரிசித்த பக்தியில் அர்ச்சகர்கள் “கோவிந்தா… கோவிந்தா…” என்று பக்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் சிலையை வசந்த மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து வசந்த மண்டபத்தில் அத்தி வரதருக்கு சிறப்பு பூஜைகள், சடங்குகள் நடந்து வருகின்றன.

- Advertisement -

அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு தற்போது அனுமதி கிடையாது. வருகிற ஜூலை 1-ந்தேதி காலை முதல் பக்தர்களுக்கு அத்திவரதர் அருள்பாலிக்கிறார்.

அறநிலை துறை சார்பில் அத்தி வரதரை தரிசிக்க மூன்றுவித ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

  • இலவச தரிசனம்
  • கட்டண தரிசனம்
  • ஸ்பெஷல் தரிசனம்

கட்டணம் தரிசனத்திற்கு ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 50 என்றும் ஸ்பெஷல் தரிசனத்திற்கு ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 500 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

ஸ்பெஷல் தரிசனத்திற்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 500 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது

ரூபாய் 50 டிக்கெட்டை நேரடியாக கோவிலில் சென்று பெற்றுக் கொள்ளலாம்

ஸ்பெஷல் தரிசனத்திற்கான ரூபாய் 500 டிக்கெட் ஆன்லைன் வழியாக மட்டுமே புக் செய்ய முடியும்

அத்திவரதர் தரிசனம் டிக்கெட் புக்கிங் மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts