திருப்பதி சிறப்பு நுழைவு தரிசனம் ஏப்ரல் – ஜூன் 2022: மார்ச் 21 முதல் முன்பதிவு தொடக்கம்
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) மார்ச் 21 முதல் மார்ச் 23, 2022 வரை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2022 மாதங்களுக்கான சிறப்பு நுழைவு தரிசன (Special Entry Darshan) டிக்கெட்டுகளின் ₹ 300/-க்கான ஆன்லைன் ஒதுக்கீட்டை வெளியிட திட்டமிட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கான ஆன்லைன் ஒதுக்கீடு மார்ச் 21, 2022 அன்றும், மே மாதத்திற்கான ஒதுக்கீடு மார்ச் 22, 2022 அன்றும், ஜூன் மாதத்திற்கான ஒதுக்கீடு மார்ச் 23, 2022 அன்றும் வெளியிடப்படும் என்று TTD அறிவித்துள்ளது
Special Entry Darshan (Rs. 300) tickets | |
---|---|
Month | Booking start time |
Quota for April 2022 | 21-Mar-2022 – 9:00 AM |
Quota for May 2022 | 22-Mar-2022 – 9:00 AM |
Quota for June 2022 | 23-Mar-2022 – 9:00 AM |
திங்கள் முதல் புதன் வரை ஸ்ரீவாரி தரிசனத்திற்கு 30,000 சிறப்பு நுழைவு தரிசன (Special Entry Darshan) டிக்கெட்டுகளும், வியாழன் முதல் ஞாயிறு வரை ஸ்ரீவாரி தரிசனத்திற்காக 25,000 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளும் ஒதுக்கப்படும் என்று TTD தெரிவித்துள்ளது.
இதேபோல், தினசரி 30,000 ஸ்லாட் சர்வ தர்ஷன் (SSD) டிக்கெட்டுகள் திருப்பதி கவுண்டர்களில் பூதேவி வளாகம், ஸ்ரீனிவாசம் வளாகம் மற்றும் ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி சௌல்ட்ரீஸ் ஆகிய இடங்களில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் என்று TTD தெரிவித்துள்ளது.
டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்
I want to go thirupati