லிங்கோத்பவ காலம் : இரவு 11.30 முதல் நள்ளிரவு 1 மணி வரை
திருவண்ணாமலையில் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் சிவபெருமான் ஒளி வடிவில் காட்சி கொடுத்த நாள் சிவராத்திரி. அப்படிச் சிவன் விஸ்வரூப தரிசனம் கொடுத்த காலம் லிங்கோத்பவ காலம்னு சொல்லப்படுகிறது.
இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் கூட இந்த லிங்கோத்பவ காலம் வரையிலாவது விழித்திருந்து வழிபாடு செய்தால் நல்லது. மகாசிவராத்திரியன்று கண் விழித்து நான்கு கால பூஜைகளையும் காண்பது சிறப்பு. அதில் 3வது காலமான லிங்கோத்பவர் காலத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பு.
சிவராத்திரி அன்று நள்ளிரவு கடைசி 14 நாழிகை அதாவது இரவு 11.30 முதல் நள்ளிரவு 1 மணி வரையான காலம் லிங்கோத்பவ காலம் என்றழைக்கப்படும். அதை நினைவுப்படுத்தும் விதமாகத் தான் சிவன் ஆலயலங்களில் சிவலிங்கத்துக்குப் பின்புறம் லிங்கோத்பவர் இடம் பெற்றிருப்பார். சிவனை அந்த நேரத்தில் நாம் வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகும்.