சந்திர கிரகணம் ஜூலை 16 – நேரம் மற்றும் முழு விவரம்
சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு ஜூலை 16-17 ஆகிய இருதினங்களில் இரவு தோன்றுகிறது. இந்தியாவிலும் மற்ற சில நாடுகளிலும் இதனை கண்களால் சாதாரணமாக பார்க்கமுடியும். இது 2019 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணமாக இருக்கும்.
பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நகரும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. அப்போது பூமியினுடைய நிழல் நிலவின் மீது விழுந்தால் அதனை சந்திர கிரகணம் என்கிறோம். சூரியன் வெளிச்சம் இல்லாததால் அந்த நேரத்தில் நிலவு தெரியாது. அடுத்த சந்திர கிரகணம் 2021 ஆம் ஆண்டு மே26 அன்று தெரியும்
இந்தியாவில் இன்று நள்ளிரவு சரியாக 12:13 மணிக்கு அதாவது ஜூலை 17 சந்திர கிரகணம் தொடங்குகிறது. அதிகாலை 1:31 மணிக்கு உச்சம் அடைந்து, காலை 3 மணிக்கு முடிகிறது. பகுதி நேர சந்திர கிரகணம் 4.29 மணிக்கு முடிகிறது.
சுமார் 5 மணி நேரம் வரையில் சந்திரகிரகண காலம் உள்ளது.
பகுதி சந்திர கிரகணத்தின் காலம் சுமார் 2 மணிநேரம் 58 நிமிடங்கள்.