ஸ்ரீரங்கம் தல வரலாறு

- Advertisement -

ஸ்ரீரங்கம் தல வரலாறு

ஸ்ரீரெங்கநாதன் திருவடிகளே சரணம்
குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி
வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலிமாகண்டு
உடலொனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே.

Sri-Ranganathaswamy-Temple

தல வரலாறு

திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மா அவர்கள் விஷ்ணுவின் நினைவால் அவரின் திருவுருவை நினைத்து அவரின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூசை செய்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். தர்மவர்ம சோழன் அவர்கள் அயோத்திக்கு சென்ற போது இக்கோயில் என்னுடைய சோழ நாட்டில் இருந்தால் என்ன என்று நினைத்தார். அவரின் விருப்பம் பிற்காலத்தில் பெருமாள் அனுக்கிரகம் பண்ணினார். ஸ்ரீராமரின் காலம் வரை முறையாக பூஜை செய்து வந்தார். பிரம்மா முதல் ஸ்ரீராமர் வரை பங்குனி உற்சவம் மட்டும் மறக்காமல் செய்து வர வேண்டும் எனக்கூறி இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையில் சேஷ பீடத்தில் வைத்து தர்மவர்ம சோழன் மற்றும் வீபிஷணன் இருவரும் சேர்ந்து பங்குனி உற்சவம் செய்தனர். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் “தென்திசை இலங்கை நோக்கி” பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான். தர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளி ஓரிடத்தில் அமர்ந்து வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான். அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம் என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விரும்பியது நம்மை அருள் செய்வதற்கு எனவே ஸ்ரீரெங்கநாதர் திருவடிகளை பற்றுவோம். அவரருள் பெறுவோம்.

- Advertisement -

ஸ்ரீரெங்கநாதன் திருவடிகளே சரணம்.

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts