- Advertisement -
நவக்கிரகம் சுற்றும் பொழுது எந்த கிரகம் எந்த திசையில் இருக்கிறது என்று தெரியுமா?
இந்துக்களின் வழிபாட்டுக்குரியதாயமைந்த ஒன்பது கிரகங்கள் நவக்கிரங்கள் எனப்படும். நவகிரகங்கள் கோவிலில் பின் வரும் வகைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்.
- சதுரம்
- ஒரே நேர் கோட்டில்
- வட்டம்
பொதுவாக கோவில்களில் பிரதிஷ்டை செய்வது ஆகம விதிப்படி மேலும் சித்தர் வழி என்று சில வகைகள் உள்ளன.
Also Read: பிரதோஷ தினத்தில் பாட வேண்டிய மந்திரங்கள்
சதுர வடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நவகிரக மேடையில், பின்வரும் திசையில் பொதுவாக கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம்.
- Advertisement -
- சூரியன்( நடுநாயகனாக) கிழக்கு நோக்கி
- சந்திரன் (தென்கிழக்கு மூலையில்) மேற்கு நோக்கி
- செவ்வாய்( சந்திரன் , ராகு நடுவில்)தெற்கு நோக்கி
- புதன் (வடகிழக்கு மூலையில்) கிழக்கு நோக்கி
- வியாழன் (புதன், கேது நடுவில்) வடக்கு நோக்கி
- சுக்கிரன் (சந்திரன், புதன் நடுவில் )கிழக்கு நோக்கி
- சனி (கேது , ராகு நடுவில்) மேற்கு நோக்கி
- ராகு ( தென்மேற்கு மூலையில் )தெற்கு நோக்கி
- கேது (வடமேற்கு மூலையில்) தெற்கு நோக்கி
- Advertisement -