வடபழனி முருகன் கோவில் பாலாலய பிரதிஷ்டை 12.03.2020 : முழு விவரம்

On: March 10, 2020 3:08 PM
Vadapalani-Murugan-Temple

வடபழனி முருகன் கோவில் பாலாலய பிரதிஷ்டை 12.03.2020 : முழு விவரம்

வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான பாலாயப் பிரதிஷ்டை வருகிற 2020 மார்ச் 12 ஆம் தேதி (மாசி மாதம் 29ம் நாள்) நடக்கயிருக்கிறது. இதனை முன்னிட்டு புதன்கிழமை 2020 மார்ச் 11ஆம் தேதி காலை 9 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, பிரதிஷ்டா சங்கல்பம், ஸ்ரீ கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடக்கிறது, அதை தொடர்ந்து மாலை 5 மணிக்குமேல் வாஸ்து சாந்தி பூர்வாங்க பூஜைகள் நடக்கிறது, தொடர்ந்து யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

பாலஸ்தாபன தினமான 2020 மார்ச் 12 ஆம் தேதி அதிகாலை 5.50 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. பின்னர் காலை 8 மணிக்கு மகா பூர்ணாஹீதியும், 8.30 மணிக்கு பாலாலய பிரதிஷ்டை நடக்கிறது. காலை 9.15 மணிக்கு திருப்பணிகள் தொடங்குகின்றன.

பாலஸ்தாபன விழா நிகழ்ச்சி நிரல்

தேதி நேரம் நிகழ்ச்சி
11.03.2020 காலை 9:00 மணி முதல் 11:30 மணி வரை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, பிரதிஷ்டா சங்கல்பம், ஸ்ரீ கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம்
மாலை 5:00 மணிக்கு மேல் வாஸ்து சாந்தி பூர்வாங்க பூஜைகள் ஆரம்பம்
6:00 – 8:00 மணிக்குள் கலா கர்ஷணம் முதற்கால யாகசாலை பூஜைகள் ஆரம்பம்
9:30 மணிக்குள் மஹா பூர்ணாகுதி தீபாராதனை
12.03.2020 காலை 5:50 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள்
8:00 மணி மஹா பூர்ணாகுதி தீபாராதனை
8:30 மணி பாலாலய பிரதிஷ்டை
9:15 மணி திருப்பணி துவக்கம்
9:30 மணி அருட்பிரசாதம் வழங்குதல்

 

Also Readகாரடையான் நோன்பு 2020 பூஜை செய்ய நல்ல நேரம்

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment